இலங்கையர்கள் தங்களின் கண்களை 117 நாடுகளில் உள்ள பார்வையற்றோருக்காக தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் உள்ளவர்களுக்கே கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு நேற்று முன்தினம் வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர்.
மேலும், இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், 22 இலட்சம் இலங்கையர்கள் கண் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.