உலக சந்தையில் வரலாறு காணாத அளவு கோதுமையின் விலை உயர்வடைந்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் இவ்வாறு கோதுமையின் விலை உயர்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான உக்ரைனில் கோதுமை ஏற்றுமதி தேக்கமடைந்திருப்பதும், ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட தேக்க நிலையும் மற்றொரு காரணம்.
இதனால் உலக சந்தையில் ஒரு டன் கோதுமையின் விலை 435 யூரோக்கள் அதாவது 453 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
தடைக்கு முன்னதாக, இந்த ஆண்டு 10 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை உலக கோதுமை விலை சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.