உலகின் மிகப்பெரிய மியூசியம் இன்று எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய தொல்பொருளியல் அருங்காட்சியகமாக இது விளங்குகிறது. இங்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கலைப் பொருட்கள் உள்ளது.
அருங்காட்சியகத்தில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது எகிப்திய மன்னர் டுட்டன்காமுனின் கல்லறை. இந்தக் கல்லறை முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த மியூசியம் அக்டோபர் 2024-ல் பொதுமக்களுக்கு ஓரளவு திறக்கப்பட்டது.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் ரோமானிய சகாப்தம் வரையிலான 5000 ஆண்டுகால வரலாற்று நாகரிகத்தை 12 காலரிகள் சித்தரிக்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள் மற்றும் மறுசீரமைப்பு பட்டறைகளுக்கு திறந்திருக்கும் சேமிப்பு பகுதிகளும் இந்த வளாகத்தில் அடங்கும்.
நவம்பர் 4ம் திகதி முதல் பொதுமக்கள் இந்த மியூசியத்தை பார்வையிடலாம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

