உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கப்பல்களில் ஒன்றான ‘ ‘Queen Mary 2’ உட்பட பதினேழு பயணிகள் கப்பல்கள் அடுத்த ஆண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ஜனவரி-மே மாதங்களில் 14 கப்பல்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அடுத்த ஆண்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி
உலகளவில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் இலங்கைக்கும் பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாதுறை முடங்கியிருந்தது.
அதோடு அதன்பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, மற்றும் அரசியல் நெருக்கடியால் அதளபாதாளத்துக்கும் இலங்கை சென்றுகொண்டிருந்த நிலையில் தற்போது மெல்லமெல்ல மீண்டு வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் நாட்டுக்கு உலகின் பிரபலமான கப்பல்களில் ஒன்றான ‘ ‘Queen Mary 2’ உட்பட பதினேழு பயணிகள் கப்பல்கள் வரவுள்ளமையானது நாட்டின் மீட்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.