ஐபிஎல் ஏலத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 வீரரை பஞ்சாப் அணி 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியினரால் எடுக்கப்பட்ட வீரர்களின் திறமைகளைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில், பஞ்சாப் அணி இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை மிகத் தெளிவாக தெரிவு செய்து எடுத்தது.
அதில் ஒருவர் தான், டேவிட் மலன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிரடி ஆட்டக்காரரான இவர், இந்த முறை நிச்சயம் பஞ்சாப் அணிக்கு பல வெற்றிகளை தேடித் தருவார் என்று முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பஞ்சாப் அணி இந்த 2021 ஐபிஎல் தொடரில் தன்னுடைய பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.