உலகில் அதிக பணவீக்கமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜோன் ஹோப்கிங்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கேயின் (Steve Hanke) புதிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக பணம் வீக்கம் உள்ள நாடாக சிம்பாப்வே கணிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து கியூபா, வெனிசுலா, துருக்கி, இலங்கை ஆகியன நாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.