குருநாகலில் உள்ள பகுதியொன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை ஹெட்டிபொல – பிஹிம்பிய ரத்மல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் எனவும், உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.