கேபிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தூண்டில் ஒன்றை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவ பிரதேசவாசிகள் குழுவொன்று காப்பாற்றியுள்ளது.
கவடயாகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை நதியில் 13 அடி உயரமான முதலை ஒன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது.
முதலையை கரைக்கு கொண்டு வந்ததும் உதார சஞ்சீவ என்ற இளைஞன் முன் வந்து முதலையின் வாயில் கையை வைத்து கேபிள்களால் தயாரிக்கப்பட்ட தூண்டிலை வெளியே எடுத்தான்.
மரத்தின் உதவியுடன் முதலையைப் பாதுகாப்பாகக் கட்டி, பிரதேசவாசிகளின் உதவியுடன் தூண்டிலை அகற்ற அவருக்கு சுமார் 30 நிமிடங்கள் பிடித்தன.
பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வரும் வரை மீட்கப்பட்ட முதலை அருகில் உள்ள சிறிய குளத்தில் விடப்பட்டது.