தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.