கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஒஸ்திரேலிய திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் வீரர் ஒருவருக்கு 12ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீரரான ரஸ்யாவின் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
எனினும் இந்த போட்டியின் போது மெட்விடேவ் நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்காக அவருக்கு 12 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.
நடுவரை நோக்கி , “உனக்கு பைத்தியமா? நீ என்ன முட்டாளா?… அரையிறுதியில் எப்படி இவ்வளவு மோசமாக இருக்க முடிகிறது” என்று அவர் கூச்சலிட்டார்.
இருப்பினும், போட்டி முடிவடைந்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பை கோரினார்.