இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல் இன்று முதல் 69 நாட்களுக்குள் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பதவிக் காலத்தை நீட்டித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.