நாய்க் குட்டிகளை நாகப்பாம்பு பாதுகாத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கடலூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்த அந்த நாயானது 3 குட்டிகளை ஈன்றுள்ளது.
காவல்காத்த நாகப்பாம்பு
இந்நிலையில் தாய் நாயானது உணவு தேடி நேற்று பிற்பகல் வெளியே சென்ற நிலையில் அங்கு வந்த நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகளின் அருகே படுத்துக்கொண்டது.
அதுமட்டுமல்லாது நாய்க்குட்டிகளின் அருகே யாரும் செல்லாதவாறு படம் எடுத்து சீறிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் உணவு தேடிச்சென்ற தாய் நாய் மீண்டும் வந்த போது பாம்பை கண்டு குரைக்க தொடங்கியது.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தபோது நாகப்பாம்பு நாய்க்குட்டியின் அருகே படுத்துக் கொண்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பாம்பை அவர்கள் வந்து பிடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் நாய்க்குட்டிகளை நாகப்பாம் காவல்காத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.