நாட்டின் மக்கள் தொகையில் 76% பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும், உணவுப் பொருட்களை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான தனது சமீபத்திய அறிக்கையை வெளியிட்ட உலக உணவுத் திட்டம், 73% மக்கள் விலை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த உணவை உட்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.
52% பேர் உணவின் அளவைக் குறைத்துள்ளதாகவும், 40% மக்கள் உணவு வேளையின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுப் பாதுகாப்பின்மை பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதித்துள்ள நிலையில், மக்கள் தொகையில் பாதி பேர் அதாவது 48% உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் 45 சதவீதமானவர்களும், ஊவா மாகாணத்தில் 43 சதவீதமானவர்களும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் 36% என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வட மத்திய மாகாணத்தில் 35%, மேல் மாகாணத்தில் 33% மற்றும் வடமேல் மாகாணத்தில் 31% மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவுப் பாதுகாப்பின்மை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மிகக் குறைவாகப் பாதித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மக்கள்தொகையில் 26% பேரும் வடமாகாணத்தின் 25% மக்களும் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.