நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தில் இருந்து எடுத்துச்சென்ற உணவுக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அன்றைய தினம் வரை கொடுப்பனவை கணக்கிட்டு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பனவு தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் இவ்வாறான நிலுவையிலுள்ள கணக்குகளுக்கு உடனடியாக தீர்வினை காண மாதாந்த கொடுப்பனவு தொகையை தாமதமின்றி வழங்குவதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் கொடுப்பனவு தொகை தாமதமானது தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நாடாளுமன்ற சேவை திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.