உடல் பருமன் அதிகரிப்பு பல்வேறு நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
பூசணிக்காய்
அந்த வகையில் உடல் எடையை சுலபமாக குறைக்க விரும்பினால் உணவில் பூசணிக்காய் சேர்க்கலாம்.
பூசணிக்காயில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
மேலும் பூசணிக்காயை ஜூஸாக குடிப்பதால் தேவையான சத்துக்களும் கிடைக்கும் உடல் எடையும் எளிதாக குறையும்.
தயாரிக்கும் முறை
அந்த வகையில் பூசணி ஜூஸ் தயாரிக்க நன்றாக பழுத்த பூசணிக்காயை எடுத்து தோல் முழுவதும் சீவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றை நன்றாக வேக வைக்க வேண்டும்.
அதன் பிறகு அதனை ஆப்பிள் பழ துண்டுகளுடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். அதனை வடிகட்டியில் நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த ஜூஸை குடிக்கலாம்.
பூசணி ஜூஸ் குடிப்பதால் செரிமான அமைப்புகள் நன்றாக வேலை செய்யும். இதில் உள்ள நார் சத்து செரிமான அமைப்பை சீராக்குகிறது.
மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குகிறது. செரிமானம் நன்றாக இருந்தால் உடல் எடை குறைப்பதில் பல நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.