காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன.
அவற்றை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. சொல்லப்போனால் இதை ஒரு பழம் என்றும் கூறலாம்.
பூசணிக்காய்
சிவப்பு பூசணிக்காய் பரங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகின்றது. இது குக்குர்பிடேசி எனப்படும் பூக்கும் தாவரங்களின் பூச்செடி குடும்பத்தைச் சேர்ந்தது.
இதில் சுமார் 975 வகையான உணவு மற்றும் அலங்கார தாவரங்கள் உள்ளன. இந்த தாவரத்தில் பல வகைகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனினும் வெள்ளை பூசணி மற்றும் சிவப்பு பூசணி ஆகியவை மிகவும் பிரபலமான வகைகளாக உள்ளன.
பூசணி ஆரோக்கியமானதா?
பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
இது பார்வைத் திறனை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டின் வளமான மூலமாகும்.
பரங்கிக்காய் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
பரங்கிக்காய் உயிரணு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்தோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆல்ஃபா கரோட்டின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் நிறைந்துள்ளது.
பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
பரங்கிக்காயின் நன்மைகள்
இதில் வைட்டமின்கள் பி, சி ஆகியவை உள்ளன.
உடம்பில் உஷ்ணம் நீங்க இதை சாப்பிடலாம்.
இது சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு பயனளிக்கும்.
பித்தத்தை போக்க பரங்கிக்காய் உகந்தது.
பரங்கிக்காய் பசியைத் தூண்டும்.
இதனால் வயிற்று பிரச்சனைகள் சரியாகும்