தாய்லாந்தில், இரட்டையர்களான அக்காவுக்கும் தம்பிக்கும் அவர்களது பெற்றோரே திருமணம் செய்துவைத்த வேடிக்கை சம்பவம் ஒன்று நடைபெற்றது.தாய்லாந்தில் வாழும் Weerasak (31) மற்றும் அவரது மனைவியான Rewadee (30)க்கு இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள்.ஐந்து வயதாகும் இரட்டையர்களான Washirawit Bee Moosika மற்றும் அவனது அக்காவான Rinrada Breem ஆகிய இருவருக்கும் நேற்று முன்தினம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மாப்பிள்ளை ஊர்வலமும், மேளதாளமுமாக, உறவினர்கள் சீர் வரிசையுடன், புத்த பிட்சுக்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை சிறப்பாக செய்துவைத்தார்கள் அவர்களது பெற்றோர்.இது என்ன வேடிக்கை, அக்கா தம்பிக்குள் ஏன் திருமணம் செய்கிறார்கள் என்று கேட்டால், அதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள் அவர்களது பெற்றோர்.தாய்லாந்தில், புத்த மத நம்பிக்கையின்படி இரட்டையர்களாக ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்தால், அவர்கள் பூர்வ ஜென்மத்தில் காதலர்களாக பிறந்தவர்கள் என்று அர்த்தமாம்.
காதலர்களாக இருந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகும் முன்பே அவர்களது உறவு முறிந்துபோனதால், அவர்கள் இந்த பிறவியில் அந்த உறவை முழுமையாக்குவதற்காக, விதியின்படி இரட்டையர்களாக பிறந்துள்ளார்களாம்.ஆகவே, அந்த விதியை பூர்த்தி செய்யாவிட்டால், அதாவது அவர்களை இந்த பிறவியில் சேர்த்துவைக்காவிட்டால், அவர்களுக்கு கெட்டது ஏதாவது நடந்துவிடுமாம்.ஆகவே, எவ்வாளவு சீக்கிரம் வாழ்க்கையில் அவர்களை சேர்த்துவைக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேர்த்துவைத்தால், அவர்களது துரதிர்ஷ்டம் நீங்கிவிடுமாம்.
ஆகவேதான், அக்காவுக்கும் தம்பிக்கும் ஐந்து வயதிலேயே திருமணம் செய்து, முன் ஜென்ம குறையை பூர்த்திசெய்துவிட்டார்களாம் பெற்றோர்!