இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கம் என்பது மிகவும் மாறிவிட்டது. ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது.
முதலில் 4 வேளை உணவை சத்தாக சாப்பிட வேண்டும் என்பதே பலரின் குறிக்கோளாக இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றம் இவற்றை அப்படியே மாற்றிவிட்டது.
மிகவும் முக்கியமான காலை உணவில் இதை சாப்பிட்டால் உங்களின் உடல்நலம் சீராக இருக்கும், நோய்கள் அண்டாது.
அதேபோல், காலை உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதை ஒரு ஃபேஷனாக வைத்துள்ளனர். குறிப்பாக, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆனால் காலை உணவை தவிர்ப்பது என்பது உங்கள் உடலுக்கு நீங்களே செய்துகொள்ளும் பெரிய துரோகமாகும்.
காலை உணவுதான் மிகவும் முக்கியமான உணவாகும். காலையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் உங்களின் ஆற்றல் உயர்ந்து இருக்கும். மேலும் வளர்சிதை மாற்றமும் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும்
அந்த வகையில் காலையில் எந்த உணவை சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். இந்த உணவு வாரத்திற்கு 3 நாள்கள் வரை சாப்பிடலாம். அது வேறு ஏதுமில்லை. காய்கறிகளும், சாலடும்தான். சாலட் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் அதனை காலை உணவாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம்.
நீரிழிவு நோய் உங்களை அண்டக்கூடாது என்றால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். சாலடுகள் மற்றும் காய்கறிகள் குறைந்த கலோரிகளும், நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் வயிறு நிறைந்துவிட்ட உணர்வை தரும். இதன்மூலம் உடல் எடை குறையும்.
சாலடுகள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் இருக்கிறது. அவை உடலுக்கு மிகவும் நல்லது. சாலட் மற்றும் காய்கறிகளில் குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.