உக்ரைனின் லிவிவ் நகரின் மீது ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட்ட குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தப் புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குச் செல்லும் வழியில் ஆயுதம் ஏந்தியவர்களால் அனைவரும் நிறுத்தப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை வான்வழி தாக்குதல் சத்தங்கள் தொடர்ந்தும் நகரில் கேட்பதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த பகுதியை குறிவைத்து ரஸ்யாவினால் ஏவப்பட்ட நான்கு கப்பல் ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் படையினர் அறிவித்திருந்தனர்