உக்ரைனில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
“ரஷ்யாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நேர்மையான இதை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்படும் என மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை இந்தியா கண்டிக்கவில்லை. அத்துடன் பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கவில்லை.
மேலும் சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே ரஷ்யா மற்று இந்திரா இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.
இதேவேளை ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துடன், இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.