ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஜனாதிபதி உள்பட 9 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டு அதில் இருந்த ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன.
ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.
அசர்பைஜான் சென்றுவிட்டு ஈரான் திரும்பியபோது அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதித்திட்டங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீரும் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒருமாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.