கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தின்போது வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரைக் கொடூரமாக தாக்கிய சந்தேக நபரை கைதுசெய்ய, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பெண்கள் இருவர் கைது
கஹதுடுவ பொல்கஸ்விட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தனியார் துறையில் பணியாற்றும் பெண்கள் இருவர் கடந்த 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலே இந்தச் சம்பவம் தொடர்பில் மற்றொரு பெண் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (கொழும்பு தெற்கு) 0718591578 அல்லது கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி 071-8591579 மற்றும் கொள்ளுப்பிட்டி போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் 0718594455 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.