இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு பாரிய இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 2022 ஆம் ஆண்டில் 163.58 பில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 4,000 கோடி ரூபாய்) இழப்பை பதிவு செய்துள்ளது, இது 2021 இல் பதிவுசெய்யப்பட்ட மூன்று மடங்குக்கும் அதிகமாகும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2021 இல் 49.7 பில்லியன் இலங்கை ரூபா வருமானத்தில் இழப்பை சந்தித்துள்ளது.
2022 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 168.58 பில்லியன் இலங்கை ரூபா நட்டத்தைக் கண்டதுடன் 2021 இல் 49.7 பில்லியனாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய விமான சேவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நஷ்டமடைந்து வரும் 52 அரச நிறுவனங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒன்றாகும். சர்வதேச நாணய நிதியம், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பிணையெடுப்பு வசதிக்கு ஒப்புதல் அளித்தது.
வரலாற்றில் 1998 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் அதன் நிர்வாகம் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் மட்டுமே விமான நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையைப் பெற்ற உடனேயே, அரசாங்கம் பொருளாதாரத்தின் மீது சுமையாக இருந்த வணிகங்களை விலக்க நிதி அமைச்சகத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவன மறுசீரமைப்பு பிரிவை (SRU) அமைத்தது.
நிறுவன மறுசீரமைப்பு பிரிவு ஆனது அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல் செயல்முறையை மேற்கொள்வதற்கு புகழ்பெற்ற தகுதிவாய்ந்த ஆலோசனை நிறுவனங்களை நியமிப்பதில் பணிபுரிந்தது.
செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்ட மீளாய்வுக்கு முன்னர் இலங்கையின் சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னேற்றத்தை சரிபார்க்க சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் குழு வியாழனன்று வருகை தந்த போது இழப்புகள் குறித்த ஸ்ரீலங்கன் அறிக்கை வெளியிட்டது.