கெப் வாகனத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று, தடுத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கடத்தல் சம்பவத்துக்கு உதவிய குற்றத்துக்காக மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக, கடந்த 24ஆம் திகதி இளைஞர் ஒருவர் கெப் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு, கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவம் பொலிஸார் மேற்கொண்ட. விசாரணையில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.