காதலியின் நடவடிக்கையால் விரக்தியுற்ற 21 வயதான இளைஞர் ஒருவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா- எல, ஏக்கல, மடமே வத்த பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே கடந்த 18 ஆம் திகதி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த இளைஞர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தம்மை விளையாட்டாக காதலித்ததாக அந்த யுவதி கூறியதை கேள்விப்பட்ட இந்த இராணுவ சிப்பாய் விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார்.
வீடியோ பதிவு
அதேவேளை உயிரிழப்பதற்கு மூன்று மணித்தியாலத்திற்கு முன்னர் கயிறொன்றை கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள தயாராவதாக வீடியோ பதிவு செய்து “வட்ஸ் அப்” இல் காதலிக்கு அனுப்பியுள்ளார்.
அவரது கைத்தொலைபேசியை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.