பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலண்டன் நோக்கி பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் இளைஞர் வேறு சில நபர்களுடன் இலண்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படகில் இருந்த ஏனைய நபர்கள் அவ் இளைஞரை மீட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இளைஞர்கள் பாரியளவில் பிரான்ஸில் இருந்து இலண்டன் நோக்கி படகு மூலம் புலம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.