ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கோரிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டில் அலவத்துகொட கமநல சேவை உத்தியோகத்தர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர் நிலத்தை மீட்பதற்கான சான்றிதழை வழங்குவதற்காக இரு அதிகாரிகளும் லஞ்சம் கோரியுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அலவத்துகொடவில் வசிக்கம் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.