ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
7,096 சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா, கஸகஸ்தான், ஜேர்மன், யுக்ரேன், சீனா, கெனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.