சீன கடற்படை கப்பல் ஒன்று இம்மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
85 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 18 நாட்ஸ் வேகத்தில் பயணிக்கக் கூடியது எனவும் கூறப்படுகின்றது. 50 கடற்படை வீரர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் வசதியும் இக்கப்பலில் உள்ளது.
கடற்படை அதிகாரிகளிடையே தொழில்முறை திறன்களை வளர்ப்பது மற்றும் பிற நாடுகளின் கடற்படைகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொதுவான எதிர்காலத்துடன் கடல் நடவடிக்கைகளை தொடங்குவது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று கப்பலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேசமயம் இந்த சீன கப்பல் தனது பயணத்தின் போது ஹாங்காங்கில் தொழில்நுட்ப வசதிகளை பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.