நேற்றைய தினம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையே இலங்கை வரலாற்றில் மிகவும் சிரமமானதும் சவால் மிக்கதுமான சாதாரண தரப்பரீட்சை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஊரடங்குகள் மற்றும் அமைதியின்மைகளுக்கு அண்மித்த காலப்பகுதியில் இந்த பரீட்சை நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் போக்குவரத்து, அச்சிடுதல் மற்றும் மின் விநியோகத்தடை உள்ளிட்ட பல நெருக்கடிகளும் இதன் போது காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பரீட்சைக்கு தேவையான தாள்கள் மற்றும் சில உபகரணங்களை பெற்றுக் கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டதாக எல் எம் டி தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.