இலங்கை அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு ஜனவரியில் பத்துவீதமாக காணப்பட்டது ஜூன் மாதத்தில் 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே நிறுவனம் மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்ற விதத்தினை நீங்கள் அங்கீகரிக்கின்றீர்களா நிராகரிக்கின்றீர்களா என மக்களிடம் கருத்துக்கணிப்பின் போது கேட்கப்பட்டதுடன், மேலும் பல கேள்விகள் மூலம் மக்களின் பொருளாதார நம்பிக்கை குறித்து மதிப்பிடப்பட்டதாகவும் குறிப்பிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் பொருளாதார நம்பிக்கை – 96 வீதமாக காணப்படுகின்றது ஜனவரியில் – 83 வீதமாக காணப்பட்டது என கருத்துக்கணிப்பை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. பொருளாதார நிலை மிகச்சிறப்பாக காணப்படுகின்றது என எவரும் கருத்துக்கூறவில்லை 1.8 வீதமானவர்கள் நல்லநிலை என தெரிவித்துள்ளனர்1.3 வீதமானவர்கள் முன்னேற்றம் ஏற்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து நீங்கள் திருப்தியடைகின்றீர்களா அதிருப்தியடைகின்றீர்களா என்ற கேள்விக்கு இரண்டு வீதமானவர்கள் மாத்திரம் தாங்கள் திருப்தியடைவதாக தெரிவித்துள்ள அதேசமயம் கடந்த ஜனவரியில் இது ஆறுவீதமாக காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.