அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது.
இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல் பல இடங்களில் தமிழ் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை முழுவதும் தமிழ், சிங்கள புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தமிழ் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. அரச நிறுவனம் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் தமிழ் இருக்க வேண்டும் என்பது அரசியல் யாப்பாகும்.
எனினும் திட்டமிட்ட வகையில் தமிழ்மொழி நிராகரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை அணிக்கு பல இலட்சம் தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.