இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை ரூபாய் 2000 செலவில் வழங்குவதாக தபால் திணைக்கள அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
ஹட்டன் நேஷனல் வங்கியின் (HNB) முத்திரையை வெளியிடுவதற்காக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், திருமணங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் விருந்துகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப 20 முத்திரைகள் கொண்ட முத்திரைத் தாளையோ அல்லது தமது சொந்த புகைப்படங்களையோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தார்.
தம்பதிகளின் புகைப்படங்களைக் கொண்ட இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடும்பங்கள் தங்கள் திருமண அட்டைகளின் தனித்துவத்தை அதிகரிக்கலாம். இந்த முத்திரைகள் தபால் முத்திரைகளாகவும் பயன்படுத்தலாம் ,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.