இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி டி சில்வா தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷம்மி டி சில்வா இலங்கை கிரிக்கெட்டின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு மூன்று பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது அந்நாட்டில் உள்ள சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதலில் அவர்கள் தலையிட்டதாகவும் மனுதாரர்கள் கூறுகின்றனர்.
குறித்த பெண்கள் முதலாம் தர விமானப் பயணச்சீட்டில் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்காக ஷம்மி டி சில்வா பல்வேறு செலவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.