இலங்கை காவல்துறைக்கு ரூ. 23 மில்லியன் பெறுமதியான அதிவேக படகு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த படகு இன்றைய தினம் (05-12-2023) இலங்கை பொலிஸ் மரைன் பிரிவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அதிவேக படகு ஆரம்பத்தில் ஜப்பானிய அரசாங்கத்தால் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.