இலங்கை அரசாங்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சந்தேகநபரின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
பிணை கோரிக்கை தொடர்பாக எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இருந்தால், எதிர்வரும் 24 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.