இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருப்பது தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 654 புள்ளிகளுடன் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி ஐந்து இடங்கள் சரிந்து 15வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்
கொரோனா காரணமாக இந்திய தொடரை தவறவிட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.