மாத்தறையில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தறை – ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய ஆசிரியை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலையைச் செய்த சந்தேக நபர் உயிர்மாய்க்க முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.