இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.
எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து எச்.ஐ.வி. தொற்றுவதைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் ஆண், பெண்கள் மத்தியில் பால்வினை மற்றும் எச்.ஐ.வி. தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.