இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போரிற்கு , வாகனம் கொள்வனவு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம் என நாட்டிலுள்ள உள்ளூர் வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகனங்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனங்கள் இறக்குமதி
வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கையில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மாத்திரமே சந்தையில் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் யோசிக்க முடியாது. வாகனங்களின் விலைகள் கணிசமாகக் குறையவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குத்தகையில் வட்டி செலுத்துதல் அதிகரித்து வருவதாலும், வைப்பு செய்பவர்களுக்கு அதிக வங்கி வட்டி விகிதங்களாலும், தங்கள் வாகனங்களை விற்பனை செய்த பின்னர் பணத்தை வைப்பு செய்யும் போக்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குத்தகை வசதிகளுக்குச் செல்ல வேண்டாம் என உள்ளூர் விற்பனையாளர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டனர், ஆனால் யாராவது கொள்வனவு செய்ய விரும்பினால், குத்தகை விகிதங்கள் அதிகரிப்புக்கு முன்னர் இருந்ததைப் போலவே இருப்பதால், அவர்கள் அதற்குச் செல்லலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.