இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய தாய் ஒருவருக்கே இவ்வாறு 6 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் குழந்தைகள் மூவர் மற்றும் ஆண் குழந்தைகள் மூவர் இவ்வாறு பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் மற்றும் குழந்தைகள் பூரண குணத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.