நாட்டில் முதன்முறையாக ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையானது களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.