காலியில் இன்று (21) காலை 6 மணி அளவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலி கொஸ்கொட இத்தருவா பகுதியில் இத் துப்பாக்கி சூடு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான விஜித் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.