மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகும் பலசரக்கு மற்றும் வாசனைத்திரவியங்களில் ஒன்றான மிளகுக்கு நல்ல விலை கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலர்ந்த மிளகு ஒரு கிலோ 1000ரூபாவிற்கும் அதிகம் விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
தற்போது நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதேவேளை அதற்கு இணையாக மிளகின் விலையும் உயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதனால் மத்திய மலைநாட்டில் மிளகு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர். குறிப்பாக ஹாரிஸ்பத்துவ மற்றும் பாத்ததும்பறைப் பிரதேசங்களில் உற்பத்தியில் ஈடுபடுவோர் நன்மையடைந்துள்ளனர்.