கடந்த 30 அண்டுகளாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இன்று (16-08-2024) ஆலயத்திற்கு நிர்வாகத்தினரும் மக்களும் செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் வாரங்களிலும் வெள்ளிக் கிழமைகளில் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ஆலயத்திற்க்கு செல்வதற்கும் சிரமதானப் பணிகளில் ஈடுடவும் அடியவர்களை கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.