மாத்தளை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் பகுதியில் நேற்றையதினம் (29-04-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிந்த சகோதரன், சகோதரின் உடல்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.