இலங்கையில் மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிப்பதற்காக, எரிசக்தி அமைச்சுடன் எந்தவித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்கவுள்ளதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அவ்வாறாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிப்பது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

