இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
2020-இல் 16 நிலநடுக்கங்களும் 2021-இல் 18 நிலநடுக்கங்களும் 2022-இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமளிப்பதற்காக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏனைய நிறுவனங்கள் இணைந்து இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.