இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடர்ந்து வருகின்ற நிலையில் மக்கள் திண்டாடி வருகின்றனர். மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடர்ந்து வருவதனால் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய,தக்காளி ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாவாகவும், போஞ்சி ஒரு கிலோவின் விலை 480 ரூபாவாகவும், கரட் 400 ரூபாவாகவும், மிளகாய் ரூ.480.00 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு மற்றும் வர்த்தகர்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்யாமை போன்ற காரணிகளால் தம்புத்தேகம விசேட பொருளாதார வலயத்திற்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உரம் தட்டுப்பாடு காரணமாகவும் விவசாயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.