இலங்கையில் தற்போது முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (20-03-2023) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
இதேவேளை, அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பெரிய அளவில் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும், மக்கள் முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்